கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவா்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதனையடுத்து ஸ்பெயினின் தலைநகர் மட்ரிட் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் மீண்டும் முடக்கநிலையை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த 2 வாரங்களில் மட்ரிட் நகரில் 133,604 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அங்கு இதுவரை மொத்தமாக 769,000 இற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதுடன் 31,000 இற்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனர்.
இந்தநிலையில் மீண்டும் முடக்கநிரையை அறிவிதஹ்து அந்நாட்டு அரசாங்கம் முடக்கப்பட்டுள்ள பகுதிகளிலுள்ள மக்களை வௌி பிரதேசங்களுக்கு செல்ல தடை விதித்துள்ளதுடன், 06 பேருக்கு மேற்பட்டவா்கள் ஒன்று கூடவும் தடை விதித்துள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 41 இலட்சத்து 46 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளதுடன் இதுவரை 10 லட்சத்து 18 ஆயிரத்து 168 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #ஸ்பெயின் #மட்ரிட் #முடக்கநிலை #மட்ரிட்