உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸை சேர்ந்த 19 வயது பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பின்னர் உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக நீதி கேட்டு செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்களை சுமார் ஒன்றரை மணி நேரம் மாநில காவல்துறையினர் தடுத்து வைத்து பின்னா் விடுவித்துள்ளனர்.
இதையடுத்து ராகுல் காந்தி இன்று வியாழக்கிழமை இரவு வெளியிட்ட ருவிட்டர் பதிவில், இன்னும் எத்தனை ஆதிவாசி வறியநிலை மக்களின் குரல்களை நசுக்குவீர்கள், எவ்வளவு மகள்களை ரகசியமாக எரிக்கப்போகிறீர்கள், இந்த நாட்டின் குரலை ஒடுக்க உங்களால் முடியாது என்று கூறி ஹாத்ரஸ் பெண் எரிக்கப்பட்ட நிகழ்வை மேற்கோள்காட்டி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலம், ஹாத்ரஸ்மாவட்டத்தில், வயல்வெளியில் வேலை பார்த்துவிட்டு தனது தாயுடன் சென்றுகொண்டிருந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம் பெண் ஒருவர் ஆதிக்க வகுப்பைச் சேர்ந்த நான்கு இளைஞர்களால் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டார்.
அவர் இது குறித்து வெளியே கூறிவிடக்வடாது என்பதற்காக அந்தப் பெண்ணின் நாக்கை அறுத்துள்ளதுடன் மேலும் கடுமையாகத் தாக்கி, முதுகெலும்பை உடைத்துவிட்டு, சாலை ஓரத்தில் விசி எறிந்துவிட்டுப் போய்விட்டனர்.
குற்றுயிரும் குலைஉயிருமாக மீட்கப்பட்ட அந்தப் பெண், அலிகாரில் உள்ள ஜே.என். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கடந்த 28 ஆம் தேதி டெல்லி சப்தர் ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரண்டு வாரங்களாக உயிருக்குப் போராடிய அந்தப் பெண் செப்டம்பர் 30 ஆம் திகதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்காமல், உத்திரப்பிரதேச கhவல்துறையினர் எடுத்துச் சென்று எரித்திருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது #ஹாத்ரஸ் #உத்தரபிரதேசம் #வன்கொடுமை #ராகுல் காந்தி