ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் கடலுக்குச் சென்ற மீனவர் நேற்று புதன் கிழமை (30) கடலில் விழுந்து காணாமல் போயுள்ளாா் காணமல் போன மீனவர் குறித்து இது வரை எந்த வித தகவலும் கிடைக்கவில்லை எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன் கிழமை (30) காலை ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து 550க்கும்; மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்கச் கடலுக்குள் சென்றனர்.
இதில் தங்கச்சி மடத்தை சேர்ந்த தனிக்கிளாஸ்; என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற இன்னாhசி, ஜோகன், இனஸ்கோ, இம்மானுவேல், கார்சன், சுவித்து ஆகிய 7 பேர் விசைப்படகில் கச்சத்தீவுக்கும் தனுஸ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது திடீரென கடலில் சீற்றம் ஏற்பட்டுள்ளதனால் கார்சன் என்ற மீனவர் படகிலிருந்து நிலை தடுமாறி நடுக்கடலில் விழுந்துள்ளார்.
இதனையடுத்து படகில் இருந்த சக மீனவர்கள் இரவு முழுவதும் அப்பகுதியில் தேடிய போதும் அவா் கிடைக்கவில்லை.
இதனையடுத்து உடனடியாக இச்சம்பவம் குறித்து விசைப்படகு உரிமையாளர் மண்டபம் கடலோர காவல் படை, மெரைன் காவல்துறை மற்றும் ராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்த இன்று வியாழக்கிழமை (1) காலை முதல் இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ஹேவர்கிராப்ட் மற்றும் சிறிய ரக ரோந்து படகுகள் கொண்டு கரையோர பகுதிகளில் தேடி வருகின்றனர்.
எனினும் இதுவரை காணாமல் போன மீனவர் குறித்து தகவல் ஏதும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #காணாமல் #மீனவர் #ராமேஸ்வரம்