இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளராக முன்னாள் வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளராக செயற்பட்டு வந்த முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி. துரைராஜசிங்கம் பதவிவிலகியதனை வெற்றிடமாக காணப்பட்டு வந்த பொதுச்செயலாளா் பதவிக்கே அவா் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளாா்.
கட்சி மட்டத்தில் பொதுச்செயலாளரொருவரை நியமிக்கும் பொருட்டு துணைத்தலைவர்களாக செயற்பட்டு வந்த ப. சத்தியலிங்கம் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரில் ஒருவரை பொதுச்செயலாளராக நியமிக்க உத்திதேசிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழரசுக்கட்சியின் பொதுச்சபை கூடும் வரை
ப. சத்தியலிங்கம் பொதுச்செயலாளராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். #தமிழரசுக்கட்சி #பொதுச்செயலாளா் #சத்தியலிங்கம்