கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெள்ளைமாளிகை தொிவித்துள்ளது.7
74 வயதான டிரம்புக்குக்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதரைனயடுத்து இவா்கள் இருவரும் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்தநிலையில் வெள்ளைமாளிகையில் இருந்த டொனால்ட் டிரம்பிற்கு நேற்று முதல் தொடர்ந்து காய்ச்சல் தொடர்ந்து நீடித்து வருவதால் மேல் சிகிச்சைக்காக ஜனாதிபதி டிரம்ப் அலபாமா மாகாணத்தில் உள்ள வால்டர் ரேட் தேசிய ராணுவ மருத்துமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் வெள்ளை மாளிகை தொிவித்துள்ளது
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே ஜனாதிபதி டிரம்ப் மருத்துவனையில் அனுமதிக்கப்படுள்ளார் எனவும், சில நாட்கள் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் ஜனாதிபதி யின் அதிகாரங்கள் தொடர்ந்தும் டிரம்ப்பிடமே காணப்படும் எனவும், ஜனாதிபதி பணிகளை அவர் தொடர்ந்து கவனிப்பார் எனவும் வெள்ளைமாளிகையின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். #டிரம்ப் #மருத்துவமனை #கொரோனா #வெள்ளைமாளிகை