Home இலங்கை திவுலப்பிட்டிய, மினுவங்கொடவில் ஊரடங்குகிறது…

திவுலப்பிட்டிய, மினுவங்கொடவில் ஊரடங்குகிறது…

by admin

கம்பஹா மாவட்டத்தின் திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட ஆகிய காவற்துறைப் பிரிவுகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் காவற்துறை ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் மறு அறிவித்தல் வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, கம்பஹா மாவட்டத்தில் திவுலப்பிட்டிய மற்றும் மினுவங்கொட காவற்துறை பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் என பதில் காவற்துறை மா அதிபர் C.D. விக்ரமரத்ன பணித்துள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் சந்தர்ப்பத்தில் குறித்த பகுதிகளுக்குள் பிரவேசிக்கவும் அங்கிருந்து வேறு பகுதிகளுக்கு செல்லவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பதில் காவற்துறை மா அதிபர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண்ணை சந்தித்தவர்கள் மற்றும் அவருடன் தொடர்புடையவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக COVID தொற்று தடுப்பு செயலணியின் தலைவரும் பதில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More