வெளிநாடுகளில் பணிபுரிந்த 64 இலங்கையா்கள் இதுவரை கொரோனாவால் உயிரிழந்துள்ளனரென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
கடந்த முதலாம் திகதி ஜோர்டானில் ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரிந்த பணிப்பெண் ஒருவர், கொரோனா தொற்றுக்குள்ளாகிய நிலையில், உயிரிழந்துள்ளாா் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி முகாமையாளரும் ஊடக பேச்சாளருமான மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த தொழிற்சாலையில், பணிபுரியும் 350 க்கும் மேற்பட்ட இலங்கையா் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில் அவர்கள் தனிமைப்படுத்தல் மத்திய நிலையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளில் 2,600 இலங்கைப் பணியாளர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #வெளிநாடுகளில் #இலங்கையா்கள் #கொரோனா #உயிரிழப்பு #ஜோர்டான் #corona