கடந்த வெள்ளிக்கிழமை புங்குடுதீவில் பூசகா் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபா்கள் வழங்கிய வாக்குமூலத்தில் தாம் மூவரும் மது போதையில் இருந்ததாகவும் பூசகரை இரும்புக் கம்பியால் தாக்கியதனால் அவர் மயங்கியதாகவும் தொிவித்துள்ளனா்.
மேலும் . சம்பவம் சிசிரி கமராவில் பதிவாகியிருக்கும் என்ற காரணத்தால் அதன் சேமிப்பகத்தை எடுத்துச் சென்று மறைத்தோம் எனவும் தொிவித்துள்ளதன் அடிப்படையில் அந்த சேமிப்பகம் காவல்துறையினரால் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், பூசகரின் உடமையிலிருந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்த சந்தேக நபர்கள் அதனை யாழ்ப்பாணம் நகருக்குச் சென்று பொருள்கள் வாங்கி வரும்படி பெண்கள் இருவரிடம் வழங்கியுள்ள நிலையில் குறித்த பணத்தை வைத்திருந்த குற்றச்சாட்டில் பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு ஊரதீவுச் சிவன் கோவில் பூசகரான கிளிநொச்சியைச் சேர்ந்த ரூபன் சர்மா (வயது-33) என்பவா் இவ்வாறு கொலை செய்யப்பட்டிருந்த நிலையில் இது தொடா்பில் அவரது உதவியாளரான விஸ்வமடுவைச் சேர்ந்த விதுஷன் மற்றும் சுழிபுரம் பாணாவெட்டையைச் சேர்ந்த ஆலய உதவியாளர்கள் இருவருமாக மூவா் ர் ஊர்காவற்றுறை காவல்துறையினரால் நேற்றையதினம் (03) கைது செய்யப்பட்டிருந்தனர்.
பெண் ஒருவரை அழைத்து வந்து கலாசார சீரழிவில் ஈடுபட்டமையை அனுமதிக்காது கண்டித்தமையை அடுத்தே பூசகரை அவரது உதவியாளரும் ஏனைய இருவரும் சேர்ந்து கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
விசாரணைகளின் நி பின்னா் சந்தேக நபர்கள் 5 பேரும் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா். #பூசகா் #உயிாிழப்பு #புங்குடுதீவு #ரூபன்சர்மா
.