மினுவங்கொடை காவல்நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. மினுவங்கொடை காவல் நிலையத்தில் உணவகமொன்றை பராமரித்து வந்தவருக்கு நபரொருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு அவரின் மகன் மூலமாக கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
அவர் மினுவங்கொடை பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் உணவகம் ஒன்றை பராமரித்துச் செல்லும் நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மினுவங்கொடை காவல் நிலையத்தின் அனைத்து அதிகாரிகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த காவல் நிலையத்தின் பணிகள் கம்பஹா காவல் நிலையத்தில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது #மினுவங்கொடை #காவல்நிலையம் #கொரோனா #உணவகம்