Home இலங்கை இரண்டடி நீளமான சிறுத்தை சடலமாக மீட்பு

இரண்டடி நீளமான சிறுத்தை சடலமாக மீட்பு

by admin

(க.கிஷாந்தன்)

லிந்துலை காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை லோகி தோட்ட வீதியின் ஓரத்தில் இன்று (09.10.2020 )காலை 7 மணியளவில் சுமார் இரண்டடி நீளமான சிறுத்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக லிந்துலை காவல்துறையினா் தெரிவித்தனர்

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த சிறுத்தையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சிறுத்தை வாகனம் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக லிந்துலை காவல்துறையினா் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சிறுத்தையின் சடலம் நுவரெலியா வனஜீவராசிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக காவல்துறையினா் மேலும் தெரிவித்தனர். #லிந்துலை #சிறுத்தை #சடலமாக #மீட்பு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More