158
அனலைதீவு பகுதியைச் சேர்ந்த கடற் தொழிலில் ஈடுபடும் இருவர் இந்தியாவிலிருந்து மஞ்சள் கடத்தலில் ஈடுபட்டமைக்காக ஊர்காவற்துறை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த இருவரும் அனலைதீவு பகுதியில் நடமாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக முதல் கட்டமாக அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்ட இருவரும் இன்றைய தினம் கடற்படையினரின் உதவியுடன் விடத்தல் பளை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படவுள்ளார்கள்.
கைதினையடுத்து யாழ்ப்பாணம் அனலைதீவிற்கான போக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love