நாகோர்னோ-காராபாக் எல்லைக்காக நடைபெற்று வந்த போரை நிறுத்துவதற்கு அர்மீனியா, அசர்பைஜான் நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன. இந்த மோதலின் போது இரு தரப்பினருப்பினராலும் குடியிருப்பு பகுதிகள் தாக்குதலுக்கு உள்ளானதுடன் பொதுமக்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்தனர்
இந்நிலையில் ரஸ்யாவின் தலைநகா் மொஸ்கோவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் போா்நிறுத்தம் மேற்கொள்ள அர்மீனியா-அசர்பைஜான் நாடுகள் இடையே ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த போர்நிறுத்த ஒப்பந்தம் இன்று முதல் நடைமுறைக்கு வருகினஹறது.
மேலும் மோதலின்போது சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் உடல்களை பரிமாறிக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #நாகோர்னோகாராபாக் #அர்மீனியா #அசர்பைஜான் #போா்நிறுத்தம்