எதிர்வரும் 5 நாட்களுக்குள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் கொரோனா தொற்றாளர்கள் பலா் அடையாளம் காணப்படலாம் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று காலை தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள் பலர், நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளதாகவும், எதிா்வரும் நாட்களில் அவா்களில் கொரோனா தொற்றுக்குள்ளானவா்கள் அடையாளம் காணப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தற்போது காவல்துறை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால், இன்னும் 2,3 நாட்களில் அந்த பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவா் தெரிவித்துள்ளார்.
அதேவேளை மினுவங்கொட கொரோனா கொத்தணியில் இதுவரையில் கொரோனா தொற்றுக்கு உள்ளனவர்களின் எண்ணிக்கை 1,307 ஆக அதிகரித்துள்ளதாகவும் இசவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #கொரோனா #அடையாளம் #சவேந்திரசில்வா #மினுவாங்கொட