181
கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மட்டு அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இன்று (13) அலரிமாளிகையில் வைத்து உத்தியோகபூர்வமாக தனது பதவியினை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு சுமார் 30000 அளவிலான வாக்குகளைபெற்ற அவர் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வதற்கான ஓர் சந்தர்ப்பத்தை பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் கேட்டிருந்தார்.
இதற்கமைய விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு இப்பதவியை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது #கருணா #மகிந்தராஜபக்ச #இணைப்பாளர்
Spread the love