உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) கொரோனா தொற்றுநோய்களைப் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள செலவிடும் நேரத்தை மட்டுப்படுத்துமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இது நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது என வலியுறுத்தியுள்ளது.
அவசரகாலத்தில் கவலை, துன்பம், அச்சம், கோபம் மற்றும் பதற்றம் ஏற்படுவது இயல்பு என உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) வெளியிட்டுள்ள காணொளியில் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, மன ஆரோக்கியத்தை பராமரிக்க எடுக்கக்கூடிய நடவடிக்கைகளின் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளது.
நீங்கள் நம்பும் நபர்களுடன் பேசுங்கள்,
மற்றவர்களுக்கு உதவுங்கள், தயவாக இருங்கள், தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்கவும்,
சுகாதார நிபுணர்கள் மற்றும் முன் வரிசை தொழிலாளர்கள் எங்கள் மரியாதை மற்றும் நன்றிக்கு தகுதியானவர்கள்,
உடல் மற்றும் மன தேவைகளுக்கு எங்கு உதவிப்பெற முடியும் என்பதைக் கண்டறியவும்.
வதந்திகளை நம்புவதைத் தவிர்க்கவும். நம்பகமான தகவல்களைப் பார்க்கவும்.
ஒரு தொற்றுநோய் பற்றிய செய்திகளை அறிந்துகொள்ள நீங்கள் செலவிடும் நேரத்தைக் கட்டுப்படுத்துங்கள்,
முடிந்தவரை மற்றவர்களிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள் #கொரோனா #செய்தி #செவிமடுப்பது #மனஆரோக்கியம் #உலகசுகாதாரஸ்தாபனம் #WHO