193
கொரோனா வைரஸ் தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதனையடுத்து மினுவாங்கொட காவல்துறைப்பிரிவுக்கு உட்பட்ட கெனிஹிமுல்ல, பெரலாந்தவத்த மற்றும் ஹெலகந்தன ஆகிய கிராமங்கள் இன்று (15) காலை முதல் முடக்கப்பட்டுள்ளன.
மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையின் ஊழியயர்கள் பலா் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதனை அடுத்து அவா்களுடன் நெருங்கி பழகியவர்களும் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு குறித்த கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளதுடன் அங்குள்ள 500 பேருக்கு இன்று பி.சீ.ஆர் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது #கிராமங்கள் #முடக்கப்பட்டுள்ளன #மினுவாங்கொ #கொரோனா
Spread the love