பிரான்சில் வரலாற்று ஆசிரியர் ஒருவா் நேற்று மாலை தலை துண்டித்து கொல்லப்பட்டுள்ளார். 47 வயதாகும் சாமுவேல் பேட்டி என்னும் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களுக்கான ஆசிரியரே இவ்வாறு தலை வெட்டிக் கொல்லப்பட்டுள்ளாா்.
பாடசாலை அருகே இடம்பெற்ற இந்த சம்பவத்தினை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்று சென்ற காவல்துறையினா் தாக்குதல் மேற்கொண்ட 18 வயதான நபரை சுட்டுக் கொன்றுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நபா் ரஸ்யாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் செசென்யா பகுதியைச் சேர்ந்தவர் என பிரான்ஸ் நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறையினா் மேற்கொண்ட விசாரணையில் அந்த ஆசிரியர் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டி விமா்சித்தமையினால் கோபமடைந்த நபர் அவரை கொன்றதாக தெரியவந்துள்ளது. இந்த தாக்குதல் குறித்து காவல்துறையினரால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. #பிரான்ஸ் #நபிகள் #பாடசாலை #வரலாற்றுஆசிரியர் #கொலை