நாடாளுமன்ற அதிகாரத்தை ஜனாதிபதியிடம் கையகப்படுத்தும் நோக்குடன் முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்தை எதிர்த்து இலங்கையின் சிரேஷ்ட தொழிற்சங்க தலைவர்கள் முன்னெடுத்த போராட்டத்தை காவற்துறையினர் தடுத்துள்ளனர்.
மக்களின் இறையாண்மையை ஒழிப்பதற்கும், ஒரு சர்வாதிகார நிர்வாகியை உருவாக்குவதற்கும் எதிராக சமூகத்திற்கு தெளிவுபடுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை காவற்துறையினர் தடுத்துள்ளதாக, “20ற்கு எதிரான தொழிற்சங்க இயக்கம்”, தெரிவித்துள்ளது.
20ற்கு எதிரான போராட்டத்தின் ஒரு கட்டமாக, தொழிற்சங்கத் தலைவர்கள் நேற்றைய தினம் (17.10.20) கொழும்புக் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாாக எதிர்ப்பு சுவரொட்டியை ஒட்ட முனைந்தனர்.
எதிர்ப்புச் சுவரொட்டியை ஒட்டடும் நோக்கில், தொழிற்சங்கத் தலைவர்கள் சமூக இடைவெளி மற்றும் பிற தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை கடைப்பிடித்து ஒன்றிணைந்த போாதிலும், காவற்துறையினர் அதனைத் தடுத்ததாக, 20ஆவது திருத்தத்திற்கு எதிரான தொழிற்சங்க இயக்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல வருடங்களாக வடக்கில் போராட்டக்காரர்களை துன்புறுத்தி வரும் காவற்துறையினர் அவர்களை காணொளி பதிவு செய்தபோாதும் அதனை அவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
“காவற்துறையினர் பல்வேறு தடைகளையும் அச்சுறுத்தல்களையும் மேற்கொண்டனர், மேலும் இந்த நிகழ்வில் பங்கேற்ற தொழிற்சங்கத் தலைவர்களை எந்த அனுமதியுமின்றி காணொளி எடுத்தனர்.” அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தலாக அமைந்துள்ள, 20ஆவது திருத்தத்தை தொழிற்சங்க இயக்கம் கண்டித்துள்ளது, தொழிற்சங்கங்கள் அமைதியாக எதிர்ப்பினை வெளியிடுகின்ற நிலையில், கொரோனா சட்டங்களை காரணம் காட்டி காவற்துறையினர் இதனை தடுப்பதன் ஊடான தனிநபரின் எதிர்ப்பு உரிமைக்கு காவற்துறையினர் தடை விதிப்பதாக அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின் போர்வையில், 20ஆவது திருத்தத்திற்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்களைத் தடுக்க காவற்துறையினரைப் பயன்படுத்துவது, 20 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்ட பின்னர் வெளிப்படும் சர்வாதிகார அரச பண்புகளுக்கான முன்னோடி செயற்பாடு என தொழிற்சங்கம் எச்சரித்துள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களின் போர்வையில் இறந்தவர்களை நினைவுகூரும் சுதந்திரத்தை வடக்கில் உள்ள தமிழர்களிடமிருந்து பறிக்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை எதிர்த்து வடக்கில் உள்ள தமிழ் முஸ்லிம்கள் சமீபத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் பாரிய கடையடைப்பு போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இலங்கை வணிக, தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சில்வெஸ்டர் ஜயகொடி, ஐக்கிய தொழிலாளர் சம்மேளனத்தின் லீனஸ் ஜயதிலக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஜோசப் ஸ்டார்லின், இலங்கை பொது முகாமைத்துவ அலுவலர்கள் சங்கத்தின் உதேனி திசாநாயக்க, அஞ்சல் ஐக்கிய தொழிற்சங்க கூட்டணியின் சிந்தக பண்டார, சுகாதார நிபுணர்களின் சங்கத்தின் ரவி குமுதேஷ், இலங்கை தொழிற்சங்க கூட்டமைப்பின் சமிந்த பெரேரா ஆகியோர், 20ற்கு எதிரான தொழிற்சங்க இயக்கம் சார்பாக ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.