நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸவிற்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னா் இவரது பாதுகாப்பிற்காக ஐந்து காவல்துறையினா் கடமைகளில் ஈடுபட்டிருந்த நிலையில் தற்போது இருவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாஸ ராஜபக்ஸ, 20 ஆவது திருத்தம் குறித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியதீனை அரசாங்கம் பாதுகாக்கிறது என பகிரங்கமாக விமர்த்தமையும், அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.