20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டை சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன நாடாளுமன்றில் சமர்பித்துள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான பாராளுமன்ற கூட்டுத் தொடரின் போது, கருத்து வெளியிட்ட அவர், அரசியலமைப்பின் 20ஆவது திருத்த சட்டமூலத்தில் சில பிரிவுகளை, குழுநிலை விவாதத்தின் போது திருத்தி நிறைவேற்றலாம் என உயர்நீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ளதென, சபைக்கு அறிவித்துள்ளார்.