மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகங்களில் ஒன்றான சிட்டி சென்டரில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்ததாக தொிவிக்கப்பட்ள்ளது
மும்பை தெற்கு பகுதியில் உள்ள நகபடா என்ற இடத்தில் இயங்கிவருகின்ற இந்த வணிக வளாகம் கட்டிடத்தை அண்மித்து 55 அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு ஒன்று உள்ளநிலையில் பாதுகாப்பு காரணங்களுக்கு 3,500 பேர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது
சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்புப்படை வீரர்கள் 24 தீயணைப்பு படை வாகனங்களை கொண்டு நீா்ப்பிரயோகம் மேற்கொண்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனா் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படாத நிலையில் தீயணைப்புப் படை வீரர்கள் இருவருக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
.இந்தநிலையில் வணிக வளாகத்தில் எவ்வாறு தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து நகபடா காவல்துறையினா் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். #மும்பை #வணிகவளாகம் #தீவிபத்து #பேர்வெளியேற்றம்