189
கோட்டை, புறக்கோட்டை, பொரள்ள மற்றும் வெலிகட காவல்துறைப்பிரிவிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்படவுள்ளதாக ராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று மாலை 6 மணி முதல் இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட உள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை களுத்துறை மாவட்டத்தில், பேருவளை, பயாகல, அளுத்கம ஆகிய பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் ஊடரங்கு உத்தரவு நாளை காலை 5 மணிக்கு தளர்த்தப்படும் எனவும் அவா் தொிவித்துள்ளார்.#கோட்டை #புறக்கோட்டை #பொரள்ள #வெலிகட #ஊரடங்கு #சவேந்திரசில்வா
Spread the love