தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 54 இலட்சம் ரூபா பணம் வைப்பில் இடப்பட்டமை குறித்து தவூஹித் ஜமாத் அமைப்பின் பொருளாராக செயற்பட்ட மொஹமட் யூசுப் மொஹமட் தெளபிக் மௌலவி ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.
அங்கு சாட்சியம் அளித்த அவர், ஷங்கிரில்லா ஹோட்டலில் தாக்குதல் நடத்தியவர் சஹ்ரான் ஹசீம் எனவும் அதனை அவருடைய தலையின் மூலம் அடையாளம் கண்டுக்கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு தலைமைத் தாங்கிய சஹ்ரான் ஹசீமுடன் தொடர்ப்பை பேணியவர் என்ற நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மொஹமட் யூசுப் மொஹமட் தௌபீக் மௌலவி நேற்று (24.10.20) சிறைச்சாலை அதிகாரிகளால் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
´நீங்கள் சஹ்ரானின் பள்ளியில் சம்பளம் வாங்குபவராக செயற்பட்டீர்களா? ´என அரச தரப்பு சிரேஷெ்ட சரட்டத்தரணி அவரிடம் வினவினார்.
´ஆம். ஒரு மௌலவியாக என்னை குறித்த பள்ளிவாசலில் இஸ்லாத்தை கற்பிக்குமாறு சஹ்ரான் ஹாசீம் அழைத்தார். அதற்கமைய நான் 2014 ஆம் ஆண்டு சம்பளம் பெறும் ஊழியனாக காத்தான்குடியில் உள்ள தௌஹித் ஜமாத் அமைப்பின் பள்ளிவாசலுடன் சம்பந்தப்பட்டு கடமையாற்றினேன்´ என குறித்த மௌலவி பதிலளித்தார்.
உங்களுடையதும், முஸ்தாகி என்பவருடையதுமான தௌஹித் ஜமாத் அமைப்புக்கு சொந்தமான வங்கி கணக்கில் 5,484,000 (54 இலட்சத்து 84 ஆயிரம்) ரூபா பணத்தை சஹாரானுக்கு வழங்கினீர்களா என அரச சட்டத்தரணி வினவினார்.
அதற்கு பதிலளித்த மெளலவி, ´நானும் அமைப்பின் பொருளாளரான முஸ்டாகினும் பணத்தைப் பெற கையெழுத்திட்டோம். பொருளாளராக அவர் சஹ்ரானுக்கு பணம் வழங்கினாரா? ஏன்பது தெரியாது எனவும், அந்தப் பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டது என அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி அவரிடம் வினவியதற்கு ´அந்த பணம்´ பள்ளிவாசம் அமைக்க பயன்பட்டதாக பதிலளித்தார்.
இதன்போது ஆணைக்குழுவின் நீதவான் நீதிமன்ற நீதிபதி அவரிடம், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதியன்று தாக்குதல்கள் நடத்தப்பட்ட போது நீங்கள் எங்கு இருந்தீர்கள் என கேட்டதற்கு பதிலளித்த மௌலவி அப்போது தான் பள்ளியில் இருந்தாக தெரிவித்துள்ளார்.
சஹ்ரானை இறுதியாக நீங்கள் எப்போது சந்தித்தீர்கள்? என ஆணைக்குழுவின் நீதவான் நீதிமன்ற நீதிபதி மீணண்டுமு வினவினார்.
´2017 ஆம் ஆண்டு மார்ச் 10 ஆம் திகதி காத்தான்குடியில் அல்லியார் சந்தியில் இடம்பெற்ற மோதலின் பின்னர் சஹ்ரானை காணவில்லை எனவும், தொலைப்பேசியிலும் உரையாடவில்லை என பதிலளித்தார்.
´நீங்கள் எப்போது கைது செய்யப்பட்டீர்கள்´ என நீதவான் நீதிமன்ற நீதிபதி அவரிடம் மறுபடியும் வினவினார்.
´தாக்குதல் நடந்த இரண்டு நாட்களில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வீட்டுக்கு வந்து சஹரானின் தலையை அடையாளம் காட்ட முடியுமா? என கேட்டனர். அதற்கமைய நான் அவரின் தலை என்பதை அடையாளம் கண்டேன் எனவும், அதனையடுத்து ஏப்ரல் 28 ஆம் திகதி நான் கைது செய்யப்பட்டேன்´ எனவும் குறித்த மௌலவி பதிலளித்தார்.