பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள மத பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிறுவர்கள் உள்பட 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் 50க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
காயமடைந்தவா்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தொிவிக்கப்பட்டுள்ளது
இந்த வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை யாரும் பொறுப்பேற்காத நிலையில் இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள பெஷாவர் நகரத்தில் ஆறு வருடங்களுக்கு ண்டுகளுக்கு முன்பு ராணுவப் பாடசாலை ஒன்றில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குழந்தைகள் உள்பட 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனா் என்ற போதிலும் பெஷாவரில் தற்போது இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது #பாகிஸ்தான் #மதபாடசாலை #குண்டுவெடிப்பு #பலி #சிறுவர்கள்