இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக அமுல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்க நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகள் தொடர்ந்து நவம்பர் 30ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதி அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தில் பின்னா் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பெரும்பாலான தொழில்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட அதே சமயம், மக்கள் அதிக அளவில் கூடும் இடங்கள் தொடர்புடைய தொழில்களுக்கு மட்டும் கட்டுப்பாடுகள் நீடிப்பதாக ள்துறை அமைச்சின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வைரஸ் பாதிப்புள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக வகைப்படுத்தப்பட்டதாகவும், அந்த மண்டலங்களுக்கு வெளியே உள்ள பகுதிகளில் இயல்புநிலை திரும்புவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவா்கள் தொிவித்துள்ளனா்.
மெட்ரோ புகையிரதங்கள் , வணிகவளாகங்கள், விடுதிகள், உணவகங்கள், விருந்தோம்பல் சேவைகள், வழிபாட்டுத்தலங்கள், யோகா மற்றும் உடல் பயிற்சிக்கூடங்கள், திரையரங்குகள், பொழுதுபோக்கு பூங்காக்கள் இதில் அடங்கும்.
இந்த நிலையிலேயே உள்துறை அமைச்சு நேற்று செவ்வாய்க்கிழமை பிறப்பித்துள்ள உத்தரவில், வைரஸ் பொது முடக்க தளர்வுகள் தொடர்பான கட்டுப்பாடுகள் வரும் நவம்பர் 30ஆம் திகதி வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. #முடக்கநடவடிக்கை #நவம்பர் #நீடிப்பு #இந்தியா #கொரோனா