இலங்கை பிரதான செய்திகள்

சீனா VS அமெரிக்கா – பரஸ்பர குற்றச்சாட்டுகளும், அறிக்கைப் போரும்….

அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சீனாவை வேட்டையாடுவோர் எனக் குறிப்பிட்டமை தொடா்பில் கொழும்பிலுள்ள சீன தூதரகம் பதிலளித்துள்ளது.

மோசமான ஒப்பந்தங்கள், இறையாண்மைக்கெதிரான வன்முறைகள், நிலங்கள், கடற்பரப்புகள் மீது சட்டவாக்கத்திற்கு ஏற்பில்லாத வேட்டையாளனாகவே சீன கம்யூனிஸ்ட் கட்சி பாா்க்கப்படுகின்றது என மைக் பொம்பியோ தெரிவித்திருந்தார்.

இதற்கு தமது ருவிட்டா் பக்கத்தில் பதிலளித்துள்ள இலங்கையிலுள்ள சீன தூதரகம் தாம் சீன மற்றும் இலங்கைக்கிடையிலான நட்புறவு மற்றும் கூட்டிணைவு தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாகவும் உங்களது Alien Vs Predator விளையாட்டிற்கான அழைப்பில் அக்கறை செலுத்தும் எண்ணமில்லை எனவும் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரு கதாபாத்திரங்களில் நடிக்கக் கூடிய நாடு எனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இந்தியாவில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள சீன வௌியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் வாங் வென்பின் , பொம்பியோ சீனாவைத் தாக்கிப் பேசுவதும் சீனாவிற்கெதிராக குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் புதிய விடயமல்ல எனக் குறிப்பட்டுள்ளாா்.

அத்துடன் அவர்கள் பழைய பொய்யை மீண்டும் மீண்டும் தெரிவித்து வருகின்றனர் எனவும் பொம்பியோ பனிப்போர் மனநிலையை வௌிப்படுத்தி வருகின்றார் எனவும் பயனற்ற பனிப்போர் மனநிலையை மாற்றுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் தொிவித்திருந்தாா்

மேலும் சீனாவின் அச்சுறுத்தல் என குறிப்பிடுவதனையும் பிராந்திய நாடுகளுக்கிடையில் பிழையான வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முயற்சிப்பதையும் பொம்பியோ நிறுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது #சீனா #அமெரிக்கா #குற்றச்சாட்டு #மைக்பொம்பியோ #இறையாண்மை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.