இலங்கை பிரதான செய்திகள்

விபத்தில் முதியவர் உயிரிழப்பு

வீதியை கடக்க முற்பட்டு நடு வீதியில் நின்றதால் மோட்டார் சைக்கிளில் மோதி வயோதிபர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.


தெல்லிப்பளை திருக்கம்புலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற கணக்காளரான  வல்லிபுரம் ஆறுமுக சாமி (வயது 76) என்பவரே உயிரிழந்துள்ளார்.


குறித்த முதியவர் சுன்னாகம் பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட வேளை வாகனங்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தமையால் ,நடுவீதியில் நின்றுள்ளார். அதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்று அவருடன் மோதி விபத்துக்குள்ளானது.


விபத்தில் படுகாயமடைந்த முதியவரை அங்கிருந்தவர்கள் மீட்டு யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இவ்விபத்து தொடர்பில் சுன்னாகம் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.  #விபத்து #முதியவர் #உயிரிழப்பு #தெல்லிப்பளை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.