174
இந்திய துணைக் கண்டத்தின் மேல் வானத்திலுள்ள வளி மாசு வளிமண்டலத்துக்குள் நுழைவதனாலேயே இலங்கையில் வளிமண்டல மாசு அதிகரித்து வருவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தொிவித்துள்ளது.
அறிக்கையொன்றின் மூலம் இதனைத் தொிவித்துள்ள குறித்த நிறுவனம் கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் கடந்த 27 ஆம் திகதி முதல் இவ்வாறு அசாதாரணமான முறையில் வளி மாசு அதிகரித்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளது #இலங்கை #வளிமண்டலமாசு
Spread the love