இயற்கைக்கெதிரான மனிதனின் செயல்கள் எதிா்காலத்தில் பல தொற்று நோய்கள் உருவாக வழிவகுக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கொரோனா வைரஸ் போன்று 8,50,000 வைரஸ்கள் உள்ளன. அவை விலங்குகளிடம் உள்ளன. அவை மனிதர்களை தாக்கக் கூடும். இயற்கைக்கு எதிரான மனிதனின் நடவடிக்கைகள் வருங்காலத்தில் பல தொற்று நோய்களை உண்டாக்க வழிவகுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக நாடுகள் அனைத்தையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளதுடன் 3 கோடிக்கும் அதிகமானோா் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தப்பது #இயற்கைக்கெதிரான #மனிதனின் #தொற்றுநோய்கள் #ஐக்கியநாடுகள் #கொரோனா