துருக்கியில் நேற்றையதினம் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தின் போது கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளதாகவும், 786 பேர் காயமடைந்துள்ளதாக பேரிடர் மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
நிலநடுக்கத்தால் இஸ்மிர் நகரமே உருக்குலைந்து போயுள்ளதாகவும் ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளதாகவும் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினரும், பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நிலநடுக்கத்திற்கு பின் 196 முறை நில அதிர்வுகள் ஏற்பட்டன எனவும் இவற்றில் 4க்கு கூடுதலாக ரிக்டர் அளவு கொண்ட நில அதிர்வுகள் 23 முறை ஏற்பட்டுள்ளன எனவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
துருக்கியில் கடுமையான நிலநடுக்கம்- 6போ் பலி – 200போ் காயம்
PublishOctober 30, 2020 3:13 pm
துருக்கி நாட்டின் ஏகன் தீவுகளில் ரிக்டர் அளவில் 7.0 அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கத்தினால் இஸ்மிர் பகுதியில் 20-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும் முதற்கட்டமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200 பேர் காயமடைந்துள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கட்டட இடிபாட்டிற்குள் பலர் சிக்கியிருக்கலாம் எனவும் தொிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் ஏற்பட்ட இந்த கடுமையான நிலநடுக்கும் அருகில் உள்ள கிரீஸ் நாட்டிலும் உணரப்பட்டதனால் அங்கு சுனாமி பேரலை ஏற்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது #துருக்கி #நிலநடுக்கம் #கிரீஸ் #சுனாமி