155
பாணந்துறையில் தற்கொலை செய்துகொண்ட 27 வயதான இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து உயிாிழந்த நபரின் பிரேத பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது.
பாணந்துறை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இது இலங்கையில் இடம்பெற்ற 22 ஆவது கொரோனா மரணமாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
Spread the love