அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் வாக்குப்பதிவு ஆரம்பமாகியுள்ளது. இன்று (03) நடைபெறும் இத்தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பிடனும் போட்டியிடுகின்றனர். அதேபோல் துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசு கட்சியின் மைக் பென்ஸ் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
அமெரிக்காவில் தேர்தல் திகதிக்கு முன்பே வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதி உள்ளதனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் கோடிக்கணக்கான மக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே வாக்களித்து விடுவது வழக்கம்.
இந்த முறை கொரோனா பரவல் மற்றும் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதை தவிர்க்கும் பொருட்டு, தேர்தலுக்கு முன்னதாகவே அஞ்சல் மூலமாகவும் மற்றும் வாக்குச்சாவடிக்கு சென்றும் 9 கோடியே 50 லட்சத்து 27 ஆயிரத்து 832 அமொிக்க மக்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்க #ஜனாதிபதித்தேர்தல் #வாக்குப்பதிவு #ஆரம்பம் #டொனால்ட்டிரம்ப் #ஜோபிடன்