இலங்கை உலகம் பிரதான செய்திகள்

கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கியஸ்த்தர் சுரேஸ் செல்வரட்ணம் காலம் ஆகினார்…

நெடுந்தீவை பிறப்பிடமாகவும், பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட பிரபல வர்த்தகரும், சமூகசேவையாளரும், கல்வி பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் (FEED) முக்கிய செயற்பாட்டாளருமான சுரேஸ் செல்வரட்ணம் பிரித்தானியாவில் காலமானார்.

சுரேஸ் செல்வரட்ணம்  FEED அமைப்பின் பங்காளனாக மட்டுமல்லாது திருகோணமலை மூதூர் மாவட்டத்தில் பின்தங்கிய கிராமங்களான சூடைக்குடா, கூனித்தீவு ஆகிய இரு பிரதேசங்களில் உள்ள ஆரம்ப பாடசாலைகளை தனது சொந்த நிதியளிப்பின் மூலம் இறக்கும் வரை  இயங்கு நிலையில் வைத்திருந்தார்.  

அந்தப் பாடசாலைகளின்  தேவைகள் அறிந்தும் நேரில் சென்று பார்வையிட்டும் FEED அமைப்பிற்கு தோளோடு தோள் கொடுத்த வள்ளல் என  சுரேஸ் செல்வரட்ணம் குறித்த இரங்கலில்  FEED அமைப்பு தெரிவித்துள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.