153
- பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணும் பணி தொடரும்பென்சில்வேனியாவில் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து நடைபெறும் என அம்மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.டிரம்பின் பிரசாரக் குழு அங்கு நடைபெறும் வாக்கு எண்ணும் பணியை நிறுத்த கோரினர்.மேலும் ஜனநாயகக் கட்சியினர், பென்சில்வேனியாவில், வாக்குகளை மாற்ற முயற்சிப்பதாக அவர்கள் குற்றம் சுமத்தினர்.இருப்பினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆளுநர் பென்சில்வேனியாவில் பதிவாகிய அத்தனை வாக்குகளும் எண்ணப்படும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
- பிரசுரிக்கப்பட்ட நேரம் 5:375:37வந்துகொண்டிருக்கும் செய்தி
- பென்சில்வேனியாவில் டிரம்ப் முன்னிலை பென்சில்வேனியாவில் டிரம்ப் குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஜோ பைடனைக் காட்டிலும் டிரம்ப் ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 414 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். புதன்கிழமையன்று டிரம்ப் 3 லட்சத்து 79 ஆயிரத்து 649 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.பென்சில்வேனியாவை பொறுத்தவரை 20 தேர்தல் சபை உறுப்பினர்களை கொண்டுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்பை தேர்ந்தெடுப்பதற்கு முன் அந்த மாகாணத்தில் தொடர்ந்து ஆறு முறை ஜனநாயகக்கட்சியைச் சேர்ந்தவர்களே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
- பிரசுரிக்கப்பட்ட நேரம் 5:085:08″
- எந்த வெளிநாட்டு சக்தியின் தலையீடும் இல்லை”
- எந்த வெளிநாட்டு சக்தியும் அமெரிக்காவின் வாக்கு எண்ணிக்கையில் மாற்றம் செய்ததாக அமெரிக்க அரசுக்கு எந்த ஆதாரமும் கிட்டவில்லை என அமெரிக்க உள்துறையின் சைபர் பிரிவின் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.“எந்த அந்நிய சக்தியாலும், அமெரிக்கர்களை வாக்கு செலுத்தாமல் தடுக்கவோ அல்லது அவர்களின் வாக்குகளை மாற்றவோ இயலாது, ”எனத் தனது அறிக்கையில் கிறிஸ்டோஃபர் க்ரெப்ஸ் தெரிவித்துள்ளார்.கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ரஷ்ய தலையீடு இருந்ததாக அமெரிக்க உள்துறை முகமைகள் தெரிவித்திருந்தன.“எந்த ஒரு வெளிநாட்டு சக்திகளும் வாக்கு எண்ணிக்கையில் தலையிடுவதையோ அல்லது முடிவுகளில் தலையிடுவதையோ தடுக்க நாங்கள் விழிப்புடன் உள்ளோம்,”“அமெரிக்க மக்கள் தொடர்ந்து வரும் நாட்களிலும் அமைதி காக்க வேண்டும்,” எனவும் கிறிஸ்டோஃபர் க்ரெப்ஸ் தெரிவித்துள்ளார்.
- பிரசுரிக்கப்பட்ட நேரம் 4:274:27
- பைடனின் வலைத்தளம்Getty ImagesCopyright: Getty Images
- பொதுவாக அதிபராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர்கள் பதவி மாற்றத்திற்கான தயாரிப்புகளை மேற்கொள்ளும் குழு ஒன்றை உருவாக்க வேண்டும்.தற்போது வரை வெற்றியாளர் யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், இரு வேட்பாளர்களுமே தாங்கள் வெற்றியை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.இந்நிலையில் தற்போது ஜோ பைடன் தனது பதவி மாற்ற வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.அதில், “பெருந்தொற்றிலிருந்து பொருளாதார மந்தநிலை மற்றும் இன அநீதி என இந்த நாடு பல தீவிரமான நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்த பதவிமாற்ற தயாரிப்புக் குழு பைடன் மற்றும் ஹாரிஸ் பதவியேற்ற முதல் நாளில் இருந்து தீவிரமாக செயல்பட்டு பணிகளை விரைவில் மேற்கொள்ளும்,” என அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.புதன்கிழமையன்று, தனது முதல் நாள் பணியில், அமெரிக்கா பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் இணையும் என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார் பைடன்.அமெரிக்கா புதன்கிழமையன்று, அதிகாரப்பூர்வமாக அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
- பிரசுரிக்கப்பட்ட நேரம் 3:423:42தற்போதைய நிலவரம்BBCCopyright: BBCArticle share tools
- பிரசுரிக்கப்பட்ட நேரம் 3:143:14ஃபிலடெல்பியாவில் வாக்கு எண்ணிக்கை தொடர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
- பென்சில்வேனியாவின் ஃபிலடெல்பியா நகரில் வாக்கு எண்ணிக்கை இடைநிறுத்தப்படாமல் தொடர வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் பெரும்பாலானோர் ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோ பைடனின் ஆதரவாளர்கள்.பிபிசியின் ஹன்னா, லாங் ஹிக்கின்ஸ், ஷனான் யூ ஆகியோர் அங்கு களத்தில் உள்ள போராட்டக்குழுவினர் பேசினார்கள்.அப்போது, வாக்கு எண்ணிக்கை ஜோ பைடனுக்கே சாதகமாக உள்ளது. இங்கு சட்ட நடைமுறைகளை காரணம் காட்டி தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக்கூடாது. ஏற்கெனவே ஜோ பைடனுக்கு சாதகமாக வாக்குகளின் முடிவு வந்து கொண்டிருக்கிறது என்று தெரிவித்தனர்.பெருமளவில் போராட்டக்காரர்கள் குவிந்து வருவதால் அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.Getty ImagesCopyright: Getty ImagesGetty ImagesCopyright: Getty ImagesGetty ImagesCopyright: Getty ImagesArticle share tools
- பிரசுரிக்கப்பட்ட நேரம் 2:282:28வாக்கு எண்ணிக்கையை நிறுத்தும் முயற்சி அற்பத்தனமான செயல் – மிஷிகன் தேர்தல் அதிகாரிReutersCopyright: Reuters
- மிஷகனில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த மேற்கொள்ளப்படும் அதிபர் டிரம்ப் பிரசாரக்குழுவின் சட்டப்பூர்வ முயற்சி அற்பத்தனமான செயல் என்று அந்த மாகாண தலைமை தேர்தல் அதிகாரி சாடியுள்ளார்.வாக்குப்பெட்டியில் பதிவான வாக்குச்சீட்டுகள் அனைத்தும் சரியான முறையில் கணக்கிடப்பட்டுள்ளதாக ஜோஸ்லின் பென்சன் என்ற மாகாண செயலாளர் தெரிவித்தார்.2016ஆம் ஆண்டில் மிஷிகன் மாகாணத்தில் 10,700 வாக்குகள் வித்தியாசத்தில் டிரம்ப் வெற்றி பெற்றார்.இந்த நிலையில், அங்கு தேர்தல் விதிமீறல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, டிரம்பின் தேர்தல் பிரசாரக்குழு சட்ட நடவடிக்கையை முன்னெடுத்திருக்கிறது.ஜோர்ஜா, விஸ்கான்சின், பென்சில்வேனியா ஆகிய மாகாணங்களிலும் இதேபோல சட்ட நடவடிக்கையை டிரம்பின் பிரசாரக்குழு முன்னெடுத்துள்ளது.
- பிரசுரிக்கப்பட்ட நேரம் 2:222:22
- பென்சில்வேனியாவில் டிரம்ப் எதிர்ப்பாளர்கள் போராட்டம்பென்சில்வேனியாவின் ஃபிலடெல்பியா நகரில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் மையத்தின் முன்பாக குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு எதிராக சிலர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.அங்கு லட்சக்கணக்கில் தபால் வாக்குகள் வந்துள்ளதால் அவற்றை எண்ணி முடிக்க சில நாட்களாகலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த வாக்குகள் அனைத்தையும் எண்ணி முடிக்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குரல் கொடுத்தார்கள்.டொனால்ட் டிரம்பின் இரண்டாம் பதவிக்காலம் தொடர்பான அச்சங்களை வெளியிட்டு அவர்கள் ஒலிபெருக்கி மூலம் பேசி வருகிறார்கள்.முன்னதாக, அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்பின் செய்தியாளர் சந்திப்பு நிகழ்வை சேகரிக்க செய்தியாளர்கள் வரத்தொடங்கியபோது அவர்களை வழிமறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், எரிக் டிரம்ப் பேசுவதற்கு ஏதுமில்லை. எங்களிடம் வந்து பேசுங்கள் என்று அவர்கள் கேரோ செய்தனர்.இதனால் அந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்வு தள்ளிப்போடப்பட்டது.
- பிரசுரிக்கப்பட்ட நேரம் 2:112:11
- வெள்ளை மாளிகைக்கு செல்ல போதிய இடங்கள் உள்ளன – பைடன்ReutersCopyright: Reuters
- அமெரிக்க அதிபராக தேர்வு பெற ஜனநாயக கட்சிக்கு போதிய இடங்கள் உள்ளதாக அதன் அதிபர் வேட்பாளர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ஆனால், அவர் “வெற்றி பெற்று விட்டேன்” என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. அமெரிக்காவில் இன்னும் பல மாகாணங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.மிஷிகனில் பைடனுக்கு வெற்றி வாய்ப்பு இருப்பதாக பிபிசி கணித்துள்ளது. அதே சமயம், விஸ்கான்சினில் அவருக்கு வெற்றி வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் கூறுகின்றன.பென்சில்வேனியாவில் இதுவரை முடிவுகள் வெளியாகாதபோதும், அங்கு நிலைமை சாதகமாக இருக்கும் என்று பைடன் கூறியுள்ளார்.இதற்கிடையே, மிஷிகன், பென்சில்வேனியா, ஜோர்ஜா ஆகிய மாகாணங்களில் தேர்தல் முடிவுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை டிரம்பின் ஆதரவாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.தபால் வாக்குகளை எண்ணும் நடவடிக்கையை நிறுத்தப்போவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அவை மோசடியாக நடந்தவை என்றும் டிரம்ப் கூறுகிறார். ஆனால், அதற்கான ஆதாரங்களை இன்னும் வெளியிடவில்லை. மேலும், பரவலாக தேர்தல் மோசடி நடந்ததற்கான ஆதாரம் ஏதுமில்லை என்று சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.பொதுவாக அமெரிக்கா முழுவதும் நிலைமை அமைதியாகவே இருக்கிறது. ஆனால், டெட்ராய்ட் பகுதியில் வாக்கு எண்ணிக்கை பகுதியில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சியினர் மோதிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் அவர்கள் அந்த மையத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை என்று களத்தில் இருந்து பிபிசி செய்தியாளர் லெபோ டிசேக்கோ கூறுகிறார்.
- பிரசுரிக்கப்பட்ட நேரம் 2:032:03
- முக்கிய மாகாணங்களில் நிலை என்ன?அரிசோனா:பொதுவாக குடியரசுக் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் மாகாணம்.பைடன் தற்போது 86 சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். சில அமெரிக்க ஊடகங்கள் அவர் வெற்றி பெற்றுள்ளதாகக் கணிக்கின்றன. இருப்பினும் பிபிசி இதனை உறுதிப்படுத்தவில்லை.
- ஜார்ஜியா: இதுவும் குடியரசுக் கட்சி ஆதரவு மாகாணமாகும். ஆனால் இந்த வருடம் இருகட்சிகளுக்கும் பெரும் போட்டி நிலவுகிறது. தற்சமயம் சிறிய வித்தியாசத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.
- வடக்குகரோலினா: போட்டிக் களத்தில் இதுவும் ஒரு முக்கிய மாகாணம் ஆகும். 95 சதவீத வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், டிரம்ப் 50.1% வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.பைடன்48.7 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.
- நேவாடா:பைடன் எதிர்பார்த்ததைவிட இங்கு அதிக போட்டியை சந்தித்து வருகிறார். நூலிழையில் அங்கு முன்னிலையில் இருக்கிறார்.
- விஸ்கான்ஸின்: மேற்கு பகுதியின் மத்தியில் இருக்கும் முக்கிய மாகணமான இது, இரு தசாப்தங்களாக ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு வழங்கிய நிலையில், 2016 ஆண்டு டிரம்பை தேர்வு செய்தது. தற்போது அங்கு அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டுவிட்ட நிலையில், பைடன் குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். இருப்பின் டிரம்ப் தரப்பினர் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என ஏற்கனவே கோரியுள்ளனர்.
- பிரசுரிக்கப்பட்ட நேரம் 1:441:44வந்துகொண்டிருக்கும் செய்தி
- மிஷிகனில் பைடன் வெற்றி பெறுவார் என கணிப்புமிஷிகனில் பைடன் வெற்றி பெறுவார் என கணிக்கப்பட்டுள்ளது.16 தேர்தல் சபை உறுப்பினர்களை கொண்ட அந்த மாகாணம் முக்கிய போட்டிக் களமாக உள்ளது. 2016ஆம் ஆண்டு டிரம்ப் வெறும் 10,704 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.இதுதான் அதிபர் தேர்தல் வரலாற்றில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியாகும்.
- BBC
Spread the love