அமெரிக்காவின் 04 பிரதான மாநிலங்களில் வாக்கு எண்ணப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான குடியரசு கட்சி வழக்கு தாக்கல் செய்துள்ளது.
பென்சில்வேனியா, மிச்சிகன், ஜோர்ஜியா மற்றும் விஸ்கொன்சின் ஆகிய மாநிலங்கள் தொடர்பிலேயே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
விஸ்கொன்சின் மாநிலத்தில் வாக்கெண்ணும் பணிகளை மீள முன்னெடுக்குமாறு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ள குடியரசு கட்சி பென்சில்வேனியா, மிச்சிகன், ஜோர்ஜியா ஆகிய மாநிலங்களில் வாக்கெண்ணும் பணிகளை நிறுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது
இதுவரை வெளியான முடிவுகளின்படி, முன்னிலையில் உள்ள ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் 264 தேர்தல் கல்லூரிகளில் வெற்றியை உறுதி செய்துள்ள நிலையில் அவர் வெற்றி பெறுவதற்கு 06 தேர்தல் கல்லூரிகளே தேவைப்படுகின்றன.
குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான டொனால்ட் ட்ரம்ப் 214 தேர்தல் கல்லூரிகளை தன்வசப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, இம்முறை அமொிக்க ஜனாதிபதி தேர்தலில் வௌிநாட்டு தலையீடுகள் இருந்தமைக்கான சான்றுகள் இல்லையென அமெரிக்க உள்துறை பாதுகாப்பு அமைச்சின் உளவுப்பிரிவு தெரிவித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஸ்யாவின் தலையீடு காணப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. #அமொிக்கஜனாதிபதிதேர்தல் #குடியரசுகட்சி #வழக்கு #ஜோபைடன் #டொனால்ட்ட்ரம்ப்