இலங்கை பிரதான செய்திகள்

றோலரருக்குள் சிக்குண்டு தொழிலாளி உயிரிழப்பு

வடமராட்சி முள்ளி பகுதியில் வீதி திருத்த பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி றோலரருக்குள் சிக்குண்டு உயிரிழந்துள்ளார். 
பனாங்கொடை பகுதியை சேர்ந்த எஸ்.பி. பிரேமரட்ன (வயது 62) எனும் நபரே உயிரிழந்துள்ளார்.


வடமராட்சி – கொடிகாமம் வீதி திருத்தப்பணிகள் நடைபெற்று வருகின்றன. குறித்த பணியில் தொழிலாளி ஈடுபட்டிருந்த போது , பணியில் ஈடுபட்டிருந்த றோலருக்குள் சிக்குண்டு, படுகாயமடைந்துள்ளார்.
அதனை அடுத்து சக தொழிலாளர்கள் அவரை மீட்டு வைத்திய சாலையில் அனுமதித்த போதிலும் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். 
சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.  #வடமராட்சி #தொழிலாளி #உயிரிழப்பு #றோலா்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.