185
“ஒரு தெற்காசியராக நம்மைச்சார்ந்த பெண்ணொருவர் உலகிலேயே மிகவும் பலம்பொருந்திய பெண்ணாக மாறியுள்ளமை தெற்காசியாவைச் சேர்ந்த அனைவரும் பெருமிதம் கொள்ளத்தக்க விடயம் என முன்னாள் அமைச்சர் மங்களசமரவீர தனது ருவீட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்..
அமெரிக்காவின் உப ஜனாதிபதியாக கமலா ஹரிஸ் தெரிவு செய்யப்பட்டதைப் போன்று, இனம், மதம், சாதி என்பவற்றிற்கு அப்பால் திறமை, தகுதி ஆகியவற்றின் அடிப்படையில், எப்போது ஒரு தலைவரைத் இலங்கை தெரிவுசெய்யப் போகின்றது எனவும் முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீர கவலை வெளியிட்டுள்ளார்.
Spread the love