205
யாழ்ப்பாணத்துக்கு கடத்தி வரப்பட்ட 105 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருள் மாதகல் கடற்பரப்பில் வைத்து இன்று புதன்கிழமை காலை படகு ஒன்றில் வைத்து கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த படகில் பயணித்த மீனவர்கள், தப்பித்துள்ள நிலையில், படகின் உரிமையாளர் கடற்படையினரால் தேடப்படுகின்றார்.
படகும் மீட்கப்பட்ட கஞ்சா போதைப்பொருளும் இளவாலை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என கடற்படையினர் தெரிவித்தனர் #கஞ்சா #மீட்பு #மாதகல் #மீனவர்கள் #உரிமையாளர்
Spread the love