தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை, பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது என இந்திய அரசு பிரித்தானியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில், கடந்த 2000 ஆம் ஆண்டளவில் பிரித்தானியா இணைத்தது.
தற்போது யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையில் விடுதலைப் புலிகள் எந்தவித வன்முறைகளிலும் ஈடுபடவில்லை. இதனால் அவ் அமைப்பை பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமென பல தரப்பினராலும் தொடர்ந்து கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்த வழக்கு ஒன்றில் தீர்பளித்த பிரித்தானியாவின் மீழாய்வு விசாரணை ஆணையம் புலிகள் மீதான தடை தவறானது என குறிப்பிட்டு இருந்தது.
இதனையடுத்து, புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கவுள்ளதாக கருத்துக்கள் நிலவியது.
இவ்வாறான சூழலில் புலிகள் மீதான தடையை பிரித்தானியா நீக்கக் கூடாதென, பிரித்தானிய உள்துறை அமைச்சிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
#தமிழீழவிடுதலைப்புலிகள் #பிரித்தானியா #இந்தியா #பயங்கரவாத அமைப்புகள்