285
இலங்கையில் கொரோனா வைரசினால் இன்று மேலும் ஐவர் உயிாிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது. கொழும்பு 14 ஐச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவரும், சிலாபத்தைச் சேர்ந்த 68 வயதான ஆண் ஒருவரும் கொழும்பு 13 ஐச் சேர்ந்த 78 மற்றும் 64 வயதான இரண்டு ஆண்களும் இரத்மலானையைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவரும் இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களிக் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #கொரோனா #உயிாிழப்பு #இலங்கை #corona
Spread the love