பிாித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சக நாடாளுமன்ற உறுப்பினருடன் கொண்ட தொடர்பால் சுய தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினா்களுடனான கூட்டத்தில் அவருடன் தொடர்பில் இருந்த நாடாளுமன்ற உறுப்பினரான லீ ஆண்டர்சன் என்பவருக்கு பரிசோதனை முடிவில் கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது
இதனையடுத்து நேற்றிரவு முதல் பொரிஸ் ஜோன்சன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
.
பொாிஸ் ஜோன்சன் முன்னா் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று குணமடைந்திருந்த போதிலும் தனிமைப்படுத்துதல் விதிகளில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #பிாித்தானிய #பிரதமர் #பொரிஸ்ஜோன்சன் #கொரோனா #தனிமைப்படுத்தல்