159
உணவருந்திக்கொண்டு இருந்த முதியவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை புலோலி மேற்கை சேர்ந்த சரவணை பூபாலசிங்கம் (வயது 61) எனும் முதியவரே உயிரிழந்துள்ளார்.
தனது வீட்டில் நேற்றைய தினம் உணவருந்திக் கொண்டிருந்த வேளை திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை திடீர் மரண விசாரணை அதிகாரி , சட்ட வைத்திய அதிகாரியின் ஊடாக உடற் கூற்று பரிசோதனையை மேற்கொள்ள ஏதுவாக சடலம் மந்திகை வைத்திய சாலையில் ஒப்படைக்க பணித்தார்.
சடலம் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. #முதியவர் #மரணம் #பருத்தித்துறை
Spread the love