உயிரிழந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவதனை எவரும் தடை செய்யக் கூடாது என பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரனின் தாயாரும் , மனு தாரருமான சின்னத்துரை மகேஸ்வரி மன்றாட்டமாக கேட்டுக் கொண்டார்.
மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்ய முயற்சிக்கக் கூடாது என கட்டளை வழங்குமாறு கோரி யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட தலையீட்டு நீதிப் பேராணை மனு யாழ். மேல் நீதி மன்றால் தள்ளுபடி செய்யப்பட்ட பின்னர் , அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
எனது மகன் இறந்து 30 வருடங்கள் கடந்து விட்டன, ஒவ்வொரு வருடமும், மகனுக்காக மாவீரர் நாளுக்கு விளக்கேற்றுகிறனான். துயிலும் இல்லத்திற்கு சென்று மகனுக்கு அஞ்சலி செலுத்தி விளக்கேற்றுவேன்.
இம்முறை மகனுக்கு விளக்கேற்றுவதனை தடை செய்ய கூடாது என்றே நீதிமன்றை நாடினேன்.நீதிமன்றம் மனுவினை தள்ளுபடி செய்துள்ளது.
ஆனாலும் ஆட்கள் சேர்க்காது அஞ்சலி செலுத்த முடியும் என குறிப்பிட்டுள்ளது. எனவே நான் வீட்டில் மகனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்துவேன். அதனை யாரும் தடை செய்ய கூடாது என மன்றாட்டமாக கேட்டுகொள்கிறேன். என தெரிவித்தார்.
இவரது மகனான வல்வெட்டித்துறை கம்பர் மலை பகுதியை சேர்ந்த,பண்டிதர் என்று அழைக்கப்படும் சின்னத்துரை ரவீந்திரன் 1985ஆம் ஆண்டு ஜனவரி 9ஆம் திகதி போரினால் உயிரிழந்தார். என்பது குறிப்பிடத்தக்கது #நினைவுகூர #அனுமதியுங்கள் #உயிரிழந்த #அஞ்சலி #மாவீரர்நாள் #கம்பர்மலை