அலரி மாளிகை மூடப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகளில் எவ்வித உண்மையுமில்லை என, பிரதமர் அலுவலக சபையின் பிரதானி யோஷித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, அலரி மாளிகையின் அனைத்து செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கிருமி தொற்று நீக்கப்படும் சந்தர்ப்பத்தில் மாத்திரம் சில மணித்தியாலங்களுக்கு அலரி மாளிகையின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்படுவதாக தெரிவித்துள்ள அவர்,அலரி மாளிகைளில் கடமைகளில் ஈடுபடும் சகலரும் சுகாதார விதிமுறைகளின் கீழ் செயற்படுவதாகவும் பிரதமர் அலுவலக சபையின் பிரதானி யோஷித ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த சில நாள்களுக்கு முன்னர், அலரிமாளிகைக்கு இணைவாக கடமையாற்றிய பாதுகாப்பு அதிகாரியொருவர் கொரோனா தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவருடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாகவும் யோஷித ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.
அலரிமாளிகை முடக்கப்பட்டுள்ளதாக தகவல்
PublishNovember 22, 2020 6:20 am
பிரதமரின் உத்தியோகபூர்வ அலுவலகமான அலரி மாளிகை கொரோனா அச்சம் காரணமாக முடக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அலரி மாளிகை இந்த வாரம் முடக்கப்பட்டிருக்கும் எனவும் மறு அறிவித்தல் வரை பணியாளர்கள் கடமைக்குச் சமூகமளிக்கத் தேவையில்லை என அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் குறித்த செய்திகள் தொிவிக்கின்றன.
அலரிமாளிகையின் பாதுகாப்புக்காக பணியில் அமர்த்தப்பட்டுள்ள விசேட அதிரடிப்படையினர் பலருக்கும் கொரோனா தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டதையடுத்தே இவ்வாறு அலரிமாளிகையைத் தனிமைப்படுத்தும் முடிவு எடுக்கப்பட்டதாக கொழும்புச் செய்திகள் தொிவிக்கின்றன.
எனினும் இவ்வாறு பிரதமரின் அலுவலகம் முடக்கப்பட்டிருப்பமை குறித்து இதுவரையில் உத்தியோகபூர்வ அறிவித்தல் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #அலரிமாளிகை ‘முடக்கப்பட்டுள்ளதாக #கொரோனா #அச்சம்