Home இலங்கை கிளிநொச்சியில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்

கிளிநொச்சியில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார்

by admin


கிளிநொச்சியில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். கிளிநொச்சி 155 ஆம் கட்டை பகுதியில் எரிபொருள் கடை ஒன்றினை நடத்தி வரும் 72 வயதுடைய பாரதி புரத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இவ்வாறு தொற்று பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம் திருவையாறு தர்மபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளா்கள் கொழும்பிலிருந்து வருகை தந்து தனிமைப்படுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டனர்.

குறித்த நபர் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு நேற்று முன்தினம் முதலாவது பரிசோதனை மாதிரி பரிசோதனைக்காக அனுப்பட்ட போது கண்டறிய முடியாத முடிவாக (Inconclusive) கிடைக்க்பெற்றுள்ளது.

நேற்றைய தினம் மீளவும் பரிசோதனைக்கு மாதிரிகள் அனுப்பட்ட போது தொற்று உறுதி செய்ய்ப்பட்டுள்ளது. குறித்த நபர் கிளிநொச்சி பாரதிபுரத்தை சேர்ந்த நபர் வெளியிடங்களுக்கு எங்கும் சென்று வராத நிலையில் இவருக்கான தொற்று சமூக தொற்றாக காணப்படுமா என சுகாதார அதிகாரிகள் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் மேற்படி நபர் சிகிச்சை பெறச் சென்ற சமயம் பொது வைத்தியசாலையில் உரிய பாதுகாப்பு நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்ற பட்டதன் விளைவாக குறித்த நபர்  வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை பெறச் சென்றது முதல்   தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உரிய பாதுகாப்புடன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுவரை நோயாளியை உரியவாறு கையாண்டமையால் வைத்திய சாலை பணியாளர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படாது பாதுகாக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக வைத்தியசாலை ஊழியர்களோ, நோயாளர்களோ பயனாளிகளோ பதட்டமடைய தேவையில்லை எனவும் அனைத்து நோயாளர் நலன் சேவைகளும் இடையூறின்றி வழமைபோல் நடைபெறுமெனவும் வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்துள்ளாா். #கிளிநொச்சி #கொரோனா #அடையாளம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More