இலங்கை பிரதான செய்திகள்

கொள்ளையர்கள் பெண் மீது வாள் வெட்டு

யாழ்.சாவகச்சேரி பகுதியில் வீடொன்றினுள் கொள்ளையிடும் நோக்குடன் உட்புகுந்த கொள்ளையர்கள் தமது திட்டம் நிறைவேறாத நிலையில் குடும்ப பெண்ணை  வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.


தாசன் தோப்பு பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று அதிகாலை முகங்களை துணிகளால் மறைத்துவாறு கைகளில் கூரிய ஆயுதங்களுடன் கொள்ளை கும்பல் ஒன்று புகுந்துள்ளது. 
அதன் போது வீட்டில் இருந்தவர்கள் அபாய குரல் எழுப்பியதை அடுத்து , கொள்ளையர்கள் வீட்டில் இருந்த குடும்ப பெண்ணை வாளால் வெட்டி காயப்படுத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். 

காயத்துக்கு உள்ளான பெண் சிகிச்சைக்காக சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  #கொள்ளையர்கள் #பெண் #வாள்வெட்டு #சாவகச்சேரி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.