உலகம் பிரதான செய்திகள்

உய்குர் முஸ்லிம்கள் விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ள போப்

சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் இன ரீதியாக துன்புறுத்தப்படுவது குறித்து போப் பிரான்சிஸ் பேசியுள்ளமை சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்விவகாரத்தில் போப் மௌனம் கலைத்திருப்பதாக சா்வதேச ஊடகங்கள் தொிவித்துள்ளன.

சீனாவில் ஜின்ஜியாங் மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உய்குர் மொழி பேசும் உய்குர் முஸ்லிம்கள், உள்ளிட்ட பல்வேறு சிறுபான்மை மக்கள் வசிக்கின்றனர்.

சீனாவின் மற்ற மாகாணங்களில் குழந்தைப் பிறப்பு கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த மாகாணத்தில் மட்டும் கட்டுக்குள் வரவில்லை என்பதனால் கடந்த சில ஆண்டுகளாக முஸ்லிம்கள், சிறுபான்மைப் பிரிவினர் இடையே குழந்தைப் பேற்றைத் தடுக்கும் செ நடவடிக்கைகளில் சீன அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர் என ஏ.பி. செய்தி நிறுவனம் மேற்கொண்ட கள ஆய்வில் தெரியவந்திருந்தது.

மேலும் அங்குள்ள மசூதிகளை சீனா இடிப்பதாகவும் தொிவித்து சீனாவின் இந்த இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக சர்வதேச அளவில் கண்டனக் குரல் எழுந்ததுடன் பல்வேறு மனித உரிமைகள் அமைப்புகளும் இவ்விவகாரத்தில் போப் கருத்து தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்திவந்தன.

இந்தநிலையில் போப் பிரான்சிஸ் முதன்முறையாக இவ்விவகாரத்தில் மௌனம் கலைத்துள்ளார்.

லெட் அஸ் ட்ரீம்: தி பாத் டூ ஏ பெட்டர் ஃபியூச்சர் (Let us Dream: The Path to A Better Future) என்ற தலைப்பில் போப் பிரான்சிஸ் எழுதியுள்ள புத்தகத்தில் , “நான் அடிக்கடி சிறுமைப்படுத்தப்பட்ட, துன்புறுத்தப்பட்ட மக்களை நினைவுகூர்கிறேன். இனபேதத்தால் துன்புறுத்தப்படும் ரோஹிங்கியாக்கள், உய்குர் இன மக்களை நினைக்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் யாசிதி இன மக்களை கொடுமைப்படுத்தி வருகிறது. எகிப்திலும், பாகிஸ்தானிலும் வெடிகுண்டுகளுக்குப் பலியாகும் கிறிஸ்துவர்களை நினைவுகூர்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

போப் பிரான்சிஸின் இந்த வார்த்தைகள் முக்கியத்துவம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது #உய்குர்முஸ்லிம்கள் #இனரீதியாக #மௌனம் #போப்பிரான்சிஸ் #ரோஹிங்கியாக்கள் #சீனா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.