184
தாயக நேரப்படி இன்று மாலை 6.05 மணிக்கு மாவீரர்கள் நினைவாக மணி ஒலி எழுப்பி, 6.06 மணிக்கு ஒரு நிமிட மௌனவணக்கம் செலுத்தி, மாலை 6.07 மணிக்கு, மாவீரர் நினைவுச் சுடர்களை ஏற்றி வணக்கம் செலுத்துமாறு ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் கேரியுள்ளன.
தாயகத்தில், மாவீரர்களுக்கு பொது இடங்களில் மக்கள் ஒன்றுகூடி வணக்கம் செலுத்தும் நிகழ்வுகளுக்கு நீதிமன்றங்கள் ஊடாக காவல்துறையினரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. அந்நிலையில் அது தொடர்பில் ஒன்றிணைந்த தமிழ் தேசியக் கட்சிகள் நேற்றைய தினம் கூடி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன. #மாவீரர்கள் #மௌனவணக்கம் #தமிழ்தேசியக்கட்சிகள்
Spread the love