சிஐடியின் முன்னாள் இயக்குநர் ஷானி அபேசேகர நேற்றிரவு திடீரென மாரடைப்பால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதனால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாரா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஷானி அபேசேகர உடனடியாக பொலன்னரறுவையில் உள்ள கல்லெல்லா தனிமைப்படுத்தப்பட்ட மையத்திற்கு மாற்றப்பட்டார்.
அவரது சிகிச்சைக்கு தேவையான வசதிகள் குறைவாக இருப்பதால் அவரை உடனடியாக கொழும்புக்கு மாற்றுமாறு வெலிகந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் கோரியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அவர் நலம்பெற வேண்டும் என வேண்டி ஷானி அபேசேகர இல்லத்தில் இன்று பல மத வழிபாடுகள் நடைபெற்று வருவதாக குடும்ப தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பான உண்மைகளை வெளிப்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா, ஷானி அபேசேகரவின் வாழ்க்கையை கடுமையான நெருக்கடியில் தள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இன்று (27.11.20) நாடாளுமன்றத்தில் உரையாற்றியுள்ளார்.
அவருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும், அவருக்கு வேறு பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதாகவும், அவரை தொலைதூரப் பகுதியில் வைத்திருப்பது கடுமையான ஆபத்து என்றும் எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே தனது உயிருக்கு கடுமையான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருவதாகவும், தனது உயிர் பாதுகாக்கப்படுவதை அரசாங்கம் உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என்றும் ஷானி அபேசேகர கூறியதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, சனி அபேசேகராவின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கொழும்பில் உள்ள ஐ.டி.எச் மருத்துவமனைக்கு அழைத்து வருமாறு எதிர்க்கட்சித் தலைவர் நாடாளுமன்றில் கோரி உள்ளார்.
#ஷானிஅபேசேகர #மரடைப்பு #கொரோனா #மாரடைப்பு