இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது.
கொழும்பு 13 மற்றும் மாளிகாவத்த பகுதிகளை சேர்ந்த 87 மற்றும் 58 வயதுடைய பெண்களும், கொழும்பு 9 மற்றும் மருதானை பகுதிகளை சேர்ந்த 54 மற்றும் 78 வயதுடைய பெண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் கொழும்பு 15, கொழும்பு 2 மற்றும் கொழும்பு 13 பகுதிகளை சேர்ந்த 36, 83 மற்றும் 69 வயதுடைய ஆண்களும் கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் 70 வயது கைதி ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #இலங்கை #கொரோனா #உயிாிழப்பு #கொழும்பு